முதலமைச்சர் விஜய் கருப்பு கோட்-சூட் அணிந்து வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற விஜய்யின் கருப்பு நிற கோட்-சூட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுவரை அரசியல்வாதிகள் பெரும்பாலும் வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தனர்.
இந்நிலையில், கோட்-சூட்டில் சட்டமன்றத்துக்கு வந்த முதல் முதலமைச்சர் என்ற கவனத்தை விஜய் பெற்றுள்ளார்.
விஜய்யின் இந்த கோட்-சூட்டை பிரபல ஆடை வடிவமைப்பாளர் சபிர் அகமது வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

விஜய்யின் உடலமைப்புக்கு ஏற்றவாறு கோட்-சூட்டை முழுமையாக தயார் செய்ய இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய் தோன்றிய ஸ்டைலை அடிப்படையாக கொண்டு இந்த வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கோட்டின் கருப்பு நிறத்தை விஜய் தானே தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
கருப்பு நிறம் அதிகாரம், ஆளுமை மற்றும் தனித்துவத்தை குறிக்கும் என்பதால் அதை தேர்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |