இளவரசர் வில்லியமுக்கு ஒரு இரகசிய காதலியா? மன்னருடைய முடிசூட்டுவிழாவில் சிக்கலை உருவாக்க இருக்கும் செய்தி
இளவரசர் வில்லியமுக்கு ஒரு இரகசிய காதலி இருந்தது குறித்த அதிரவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ள நிலையில், அந்தப் பெண்ணால் மன்னரின் முடிசூட்டுவிழாவின்போது பதற்றம் உருவாகலாம் என்னும் கூடுதல் அதிர்ச்சியை உருவாக்கும் மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.
யார் அந்த இரகசிய காதலி?
Rose Hanbury என்னும் பெண்ணுக்கும் இளவரசர் வில்லியமுக்கும் இரகசிய தொடர்பு இருந்ததாக அதிரவைக்கும் ஒரு தகவல் வெளியானாலும், அது அப்படியே வெளியே வராமல் தடுக்கப்பட்டுள்ளது.
வில்லியமுடைய மனைவி கேட், தன் மூன்றாவது குழந்தையை பிரசவித்திருந்த நேரத்தில், Roseம் வில்லியமும் சந்தித்துக்கொண்டதாக தகவல் வெளியானதுடன், அவர்கள் இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இளவரசர் குடும்பத்தின் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் ஒருவரான Roseஐ அந்த வட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என கேட் தன் கணவரிடம் சண்டையிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
இந்த விடயத்தை உறுதி செய்வதுபோல், அது குறித்து இளவரசர் ஹரியும் தனது ஸ்பேர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முடிசூட்டுவிழாவின்போது பதற்றம் ஏற்படலாம்
இந்நிலையில், மன்னர் சார்லஸ் Rose Hanburyஐ தனது முடிசூட்டுவிழாவிற்கு அழைத்துள்ளார். Roseஇன் கணவர் மன்னருடைய முக்கிய அலுவலர்களில் ஒருவர் என்பது மட்டுமின்றி, Roseஇன் மகனான Oliverம், மன்னர் முடிசூட்டுவிழாவின்போது நீண்ட அங்கி அணிந்து செல்லும்போது அதைப் பிடித்துக்கொண்டு பின்னால் நடப்பவர்களில் ஒருவர் என்பதாலும் Rose முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்னொரு விடயம் என்னவென்றால், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரின் மகன்களான ஜார்ஜூம் லூயிஸும் கூட மன்னருடைய அங்கியைப் பிடித்துக்கொண்டு அவரது பின்னே நடப்பார்கள் என்பதால், Rose அமரும் அதே இடத்தில் இளவரசி கேட்டும் அமரவேண்டிய நிலை உருவாகலாம்.
ஆகவே, மன்னரின் முடிசூட்டுவிழாவின்போது Roseம் கேட்டும் சந்தித்துக்கொள்ளும் நிலை உள்ளதால், பதற்றமான சூழல் உருவாகலாம் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.