30 படுக்கை அறைகளுடன் 5000 சதுர அடியில் பதுங்கு குழி: பிரபலம் ஒருவரின் ரூ 2200 கோடி ரகசிய மாளிகை
அமெரிக்க தீவு மாகாணமான ஹவாயில் Meta நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க்கின் பல கோடிகள் மதிப்பிலான ரகசிய மாளிகை குறித்து தகவல் கசிந்துள்ளது.
எந்த தகவலும் கசிந்துவிடாதபடி ஒப்பந்தம்
அந்த மாளிகையானது 30 படுக்கையறைகளுடன் 5,000 சதுர அடியில் உருவாக்கப்படும் பதுங்கு குழி என்றே கூறப்படுகிறது. அந்த மாளிகைக்கு சுற்றுமாக 6 அடி கல் சுவர் எழுப்பப்பட்டுள்ளதுடன், அதன் கட்டுமானம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட எந்த தகவலும் கசிந்துவிடாதபடி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த மாளிகைக்கு வெளியே 11 மரங்களில் வீடுகள் உருவாக்கப்பட்டு, அதை மொத்தமாக கயிற்று பாலங்களால் இணைத்துள்ளனர். மேலும், உடற்பயிற்சி கூடம், குளங்கள், ஹாட் டப், மற்றும் டென்னிஸ் மைதானம் உட்பட மொத்த வசதிகளைக் கொண்டுள்ள இரண்டு முதன்மை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
இதில் மிகவும் வியக்கவைக்கும் அம்சம் என்னவென்றால் ஒரு சுரங்கப்பாதையால் இணைக்கப்பட்ட ஒரு நிலத்தடி பதுங்கு குழி ஆகும், இது 5,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.
இந்திய மதிப்பில் ரூ 2240 கோடி
மேலும், வளர்ப்பு விலங்குகளுக்கான பகுதி, இயற்கை உணவு பண்னை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில், கட்டுமான பணிகளுக்கு மட்டும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை மார்க் ஜுக்கர்பெர்க் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த நிலம் வாங்குவதற்காக சுமார் 170 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்திய மதிப்பில் ரூ 2240 கோடி அளவுக்கு மார்க் ஜுக்கர்பெர்க் செலவிட்டுள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |