திருமணத்திற்கு பிறகு இளவரசர் ஹரிக்கு அரண்மனை ஊழியர்கள் வைத்த ரகசிய பெயர் தெரியுமா?
மேகன் மெர்க்கலுடன் திருமணம் முடிவான பின்னர் இளவரசர் ஹரிக்கு அரண்மனை ஊழியர்கள் பணயக்கைதி என ரகசிய பெயரிட்டு தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொண்டதாக தற்போது அம்பலமாகியுள்ளது.
இளவரசர் ஹரிக்கு மட்டுமின்றி, அவரது மனைவி மேகன் மெர்க்கலுக்கு எதிராகவும் சச்சரவை தேடுபவர் என பொருள்படும் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி மேகன் தொடர்பில் அரண்மனை ஊழியர்களுடன் இளவரசர் ஹரி அதிக முறை சண்டையிட்ட தருணங்களும் உருவாகியுள்ளது.
திருமணத்தின் போது தலையில் சூடிக்கொள்ள மேகன் திட்டமிட்டிருந்த தலையணி மறுக்கப்பட்ட விவகாரத்தில் ராணியாரே தலையிடும் சூழலும் உருவாகியுள்ளது.
வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் அணிந்து கொள்ளும் பொருட்டு மேகன் தெரிவு செய்த தலையணி மறுக்கப்பட்டதற்கு முதன்மை அதிகாரிகளில் ஒருவரும் ராணியாரின் விருப்பமான ஊழியருமான Angela Kelly,
குறித்த தலையணியானது விலைமதிப்பற்றது, திடீரென்று குறுகிய அறிவிப்பில் அதை மேகனிடம் ஒப்படைக்க முடியாது என்றும் கூறிய்யுள்ளார்.
இது இளவரசர் ஹரியை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. ஆனால் அரண்மனைக்கு சொந்தமான நகைகளை திருமணத்தன்று பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தும் ஏஞ்சலா கெல்லி மேகனிடம் இன ரீதியான பாகுபாடு காட்டியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் அனைத்து வசதிகளும் அரண்மனை ஊழியர்களால் அளிக்கப்பட்டும், மேகன் திருப்தியாகவும், மன நிறைவுடனும் காணப்படவில்லை எனவும் அரண்மனை ஊழியர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
2018 ம் ஆண்டில் விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்து முடியும் வரை, அதில் பணியாற்றிய அனைவருக்கும் கடும் மன அழுத்தத்தையே அளித்தது என்கின்றனர்.
