வெள்ளை மாளிகையை நோக்கி துப்பாக்கியுடன் வந்த நபர்: பொலிசார் அதிரடி
வெள்ளை மாளிகையை நோக்கி ஒருவர் துப்பாக்கியுடன் வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் பரபரப்பாகியுள்ளார்கள்.
வெள்ளை மாளிகையை அருகே துப்பாக்கியுடன் ஒருவர்
நேற்று, ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்திலிருந்து வெள்ளை மாளிகையை நோக்கி ஒருவர் துப்பாக்கியுடன் வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
Secret Service Uniformed Division Chief Michael Buck provided an on-scene media briefing. Our preliminary statement is below. The @DCPoliceDept will lead the investigation, as they are the primary agency responsible for use-of-force incidents within the District of Columbia. pic.twitter.com/Aqv6djUzbV
— Anthony Guglielmi (@SecretSvcSpox) March 9, 2025
கிடைத்த தகவலின்படியே, ஒருவர் வெள்ளை மாளிகையை நோக்கி வருவதைக் கவனித்த பொலிசார், அவரை அணுகியுள்ளார்கள்.
பொலிசாரைக் கண்டதும் அந்த நபர் துப்பாக்கி ஒன்றை எடுக்க, இருதரப்புக்கும் துப்பாக்கிச்சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது.
பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் காயமடைந்ததாகவும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சுடப்பட்டவர் யார், அவரது நிலை என்ன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |