பொது இடங்களில் ரகசியமாக டயானாவை கௌரவிக்கும் பிள்ளைகள்: புகைப்படங்கள் கூறும் செய்தி
இளவரசி டயானா மறைந்தாலும், அவரை இன்னமும் நினைத்துப்பார்க்கும் மனிதர்கள் பலர் உண்டு. அவர் பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள், அவர் பழகிய நண்பர்கள் என அவருடன் சம்பந்தமில்லாதவர்களே அவரை எண்ணிப்பார்க்கும்போது, அவருடைய பிள்ளைகள் அவரை மிஸ் பண்ண மாட்டார்களா?
ரகசியமாக டயானாவை கௌரவிக்கும் பிள்ளைகள்
அப்படி தங்கள் தாயை கௌரவிக்கும் வகையில் டயானாவின் பிள்ளைகளும், மருமக்களும் ரகசியமாக செய்யும் சில விடயங்கள் உண்டு.
டயானா இறந்ததும், அவரது நகைகள் அவரது பிள்ளைகளான வில்லியமுக்கும் ஹரிக்கும் கொடுக்கப்பட்டன. அவற்றை அவர்கள் பொது இடங்களில், தங்கள் தாயை நினைவுகூறும் வகையில், கௌரவிக்கும் வகையில் அணிகிறார்கள்.
இதை அவர்களுடைய புகைப்படங்களை கவனமாக பார்த்தால் கண்டறிய முடியும்.
உதாரணமாக, இளவரசர் வில்லியம் தன் பாட்டியாரான மகாராணியாரின் இறுதிச்சடங்கின்போது அணிந்திருந்த கைக்கடிகாரத்தைக் கூறலாம். அந்த Omega கைக்கடிகாரம், அவர் படிக்கும்போது அவருக்கு டயானா பரிசளித்த கடிகாரமாகும்.
அதேபோல, இளவரசர் ஹரி தன் கையில் ஒரு பிரேஸ்லெட் அணிந்திருப்பதைக் கவனிக்கலாம். அது டயானாவின் மறைவுக்குப் பின் முதன்முறையாக அவர் ஆப்பிரிக்கா சென்றிருந்தபோது வாங்கிய பிரேஸ்லெட். அதை அவர் 23 ஆண்டுகளாக அணிந்திருக்கிறார்.
மருமகள்களும் அப்படித்தான்...
டயானாவின் பிள்ளைகளைப்போலவே, அவரது மருமகள்களும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் மாமியாரை கௌரவிக்கத் தவறுவதில்லை.
இளவரசி கேட் காதில் வைரமும் முத்துக்களும் பதித்த கம்மலையும், கையில் ஒரு நீலக்கல் மோதிரத்தையும் அணிந்திருப்பதைக் காணலாம். அவை டயானாவுடையவை.
கேட்டைப் போலவே, இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகனும் டயானாவின் நகைகளை அணிந்துகொள்வதுண்டு. இப்படித்தான் அவர்கள் பொது இடங்களில் யாருக்கும் தெரியாமல் டயானாவை கௌரவிக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |