தாஜ்மஹாலின் இரகசியங்கள் : அனைவரும் தெரிஞ்சிகோங்க
பாரசீக மொழியில் 'அரண்மனைகளின் கிரீடம்' என்று பொருள்படும் தாஜ்மஹால், வட இந்தியாவில் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் உள்ளது.
1632 ஆம் ஆண்டில் பேரரசர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் மஹாலுக்கு ஒரு கல்லறையைக் கட்ட விரும்பினார். அதனால் தாஜ்மஹாலை கட்டினார்.
தாஜ்மஹாலில் மனைவியின் கல்லறை மற்றும் ஒரு மசூதி மற்றும் விருந்தினர் மாளிகை உள்ளது.
இது விலைமதிப்பற்ற மற்றும் விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குர்ஆனின் வரிகள் பல சுவர்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
20,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதை கட்டியதாகவும், கட்டுமானத்தின் போது கனமான பொருட்களை கொண்டு செல்ல 1,000 க்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஷாஜகான் கட்டிடக் கலையில் பெரும் ஆர்வம் கொண்டவர் ஆகவே தன் மனைவிக்காகக் கட்டப்போகும் கட்டிடம் உலக அளவில் பேசப்பட வேண்டும் என்பதற்காக உலக அளவில் கைத்தேர்ந்த கட்டிடக் கலை வடிவமைப்பாளர்களை வரவழைத்து தாஜ்மஹாலின் மாதிரி வரைபடத்தை வரைந்தார்.
இந்த கட்டிடத்தின் வேளைகள் 1632ம் ஆண்டு பணி தொடங்கி 1648ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
தாஜ்மஹாலின் மர்மங்கள்
- தாஜ்மஹாலில் இருக்ககூடிய மிகப்பெரிய மர்மமாக கருதபடுவது தாஜ்மஹாலில் இருக்கூடிய இரகசிய அரை.
- இந்த அரை உண்மையில் உள்ளதா என்பது இன்றுவரை எவருக்கும் தெரியாது. ஆனால் உள்ளது என்று கூறுகின்றார்கள்.
கட்டிட நுட்பம்
- இந்த ஆக்ரா கரையில் ஒரு இடத்தில் ஆழமாக தோண்டப்பட்டு மரதூண்கள் அடியில் கடினமாக இருக்கும்படி யமுனை ஆற்றின் உப்பை தாங்கும் அளவிற்கு கடினமான தூண்களை அடியில் வைத்தனர்.
- இதனுடன் சில கற்களையும் வைத்தனர். இது எதற்கென்றால் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தாலும் தாஜ்மஹால் ஒன்றும் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தாஜ்மஹால் அடியில் கடினமான தூண்களை வைத்துள்ளனர்.
- இதற்கு மேல் தான் தாஜ்மஹால் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
- 4 தூண்கள் வெளிப்புறமாக சாய்ந்தது போல் காணப்படும் இது ஏன் இவ்வாறு கட்ப்படுள்ளதென்றால் இயற்கை சீற்றத்தால் இந்த தூண் தாஜ்மஹால் மீது விழாமல் இருக்க வெளிப்புறம் சாய்ந்த மாதிரி கட்டப்பட்டுள்ளது.
இந்த கல்லறையை பார்வையிட 8 மில்லியனுக்கு மேலான மக்கள் ஒரு வருடத்திற்கு வருவார்கள்.
ஒரு தனிமனிதனின் அளவுகடந்த காதல் எந்த அளவிற்கு வலிமையானது என்பதை இந்த தாஜ்மஹால் நமக்கு உணர்த்துகிறது.
என்னதான் இந்த தாஜ்மஹாலை சுற்றி நிறைய கதைகளை மக்கள் கூறினாலும் அவற்றிற்கான தெளிவான ஆதாரங்கள் இன்றுவரை கிடைக்கவில்லை மர்ம கதவு மற்றும் பாதாள அறை போன்றவை இன்றும் கட்டுகதைகளாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.