நோயாளிக்கு மயக்க ஊசி போட்டு தங்க நகைகளுடன் தப்பிய மருத்துவர்?
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், நோயாளி ஒருவருக்கு மயக்க ஊசி போட்டு, அவரது நகைகளுடன் தப்பினார் மருத்துவர் ஒருவர்.
பின்னர், அவர் மருத்துவரே அல்ல என்பது தெரியவந்துள்ளது!
நோயாளிக்கு மயக்க ஊசி
தெலங்கானா மாநிலத்திலுள்ள செகந்திராபாத் என்னுமிடத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த பெண்ணொருவரை, மகளிர் நல மருத்துவர் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட பெண்ணொருவர் சந்தித்துள்ளார்.

நோயாளியை பரிசோதிக்கவேண்டும் என்று கூறி அவரது உறவினர்களை வெளியே அனுப்பிய அந்த ’மருத்துவர்’, நோயாளிக்கு மயக்க ஊசி போட்டுள்ளார்.
பின்னர் அந்தப் பெண் அணிந்திருந்த நகைகளுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளார் அந்த ’மருத்துவர்’.
சிறிது நேரத்துக்குப் பின் நோயாளியைக் காணவந்த அவரது உறவினர்கள், அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகியுள்ளதைக் கண்டு சத்தமிட, பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.
CCTV காட்சிகளில், மருத்துவர்கள் அணியும் கோட், மாஸ்குடன் சம்பந்தப்பட்ட பெண் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவது தெரியவே, அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.
அந்தப் பெண்ணிடம் திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 15 லட்ச ரூபாய் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |