சுவிஸ் அணு மின் நிலையத்தின் அருகே பறந்த ட்ரோன்களால் பரபரப்பு
சுவிட்சர்லாந்திலுள்ள அணு மின் நிலையம் ஒன்றின் அருகே ட்ரோன்கள் பறந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அணு மின் நிலையத்தின் அருகே பறந்த ட்ரோன்கள்
சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Gösgen என்னுமிடத்தில், அணு மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று அந்த மின் நிலையத்தை நோக்கி ஏழு ட்ரோன்கள் பறந்துவருவதைக் கண்ட உள்ளூர்வாசி ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அங்கு பொலிசார் குவிக்கப்பட்ட நிலையில், அனு மின் நிலையத்தின் பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த ட்ரோன்கள் ஏன் அணு மின் நிலையத்தை நோக்கி வந்தன என்பது தெரியவில்லை. அவற்றை இயக்கியது யார், அவற்றை பொலிசார் கைப்பற்றினார்களா என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், ட்ரோன்கள் அல்ல ஒரு விமானமே அந்த அணு மின் நிலையம் மீது மோதினாலும், அதனால் அணு மின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அந்த அளவுக்கு அந்த அணு மின் நிலையம் பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |