சுவிட்சர்லாந்தில் பரபரப்படைந்துள்ள பாதுகாப்புப்படையினர்... காரணம் இதுதான்
சுவிட்சர்லாந்தில் பாதுகாப்புப்படையினர் முழு வீச்சில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அதற்குக் காரணம், ஒரு உச்சி மாநாடு... ஆம், முதன்முறையாக அமெரிக்க அதிபரான ஜோ பைடனும் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடினும் சந்தித்துக்கொள்ள இருக்கும் விடயம் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. அதனால், சுவிட்சர்லாந்தும் பரபரப்படைந்துள்ளது.
அதற்குக் காரணம் என்னவென்றால், ஜோ பைடனும் புடினும், சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில்தான் சந்தித்துக்கொள்ள இருக்கிறார்கள்.
இப்படி இருவரும் சந்தித்துக்கொள்ளும் ஒரு திட்டம் குறித்து பல வாரங்களாகவே பேசப்பட்டுவந்தாலும், தற்போது, அவர்கள் இருவரும், வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி ஜெனீவாவில் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான், சுவிஸ் பாதுகாப்புப் படையினர் பரபரப்பாக பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் பாதுகாப்புக்கு பெடரல் பொலிஸ் அலுவலகம் பொறுப்பு என்றாலும், ஜெனீவா மாகாண பாதுகாப்புப் படையினர்தான் முன்னணியில் நின்று பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனித்துக்கொள்ள இருக்கிறார்கள்.
ஜோ பைடனும் புடினும் ஏற்கனவே சந்தித்திருக்கிறார்கள் என்றாலும், அப்போது பைடன்
துணை அதிபராகத்தான் இருந்தார்.
அவர் அதிபரானதற்குப்பின், இப்போதுதான் புடினை அமெரிக்க அதிபராக முதன்முறையாக
சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.