எளிமையான பணி செய்து மகளை வெளிநாடு அனுப்பிய தந்தை: மகளின் நெகிழ்ச்சி வீடியோவை பகிர்ந்துவரும் பிரபலங்கள்...
எளிமையான பணி செய்து, மகளை வெளிநாடு அனுப்பிய ஒரு தந்தைக்கு, அந்த மகள் நன்றி தெரிவிக்கும் வகையில் வெளியிட்டுள்ள நெகிழவைக்கும் ஒரு வீடியோ, பிரபலங்களால் பகிரப்பட்டுவருகிறது.
Security guardஆக பணியாற்றும் தந்தை
இந்திய இளம்பெண் ஒருவரது தந்தை, Security guardஆக பணியாற்றும் நிலையில், உன்னால் உன் மகளை வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்பமுடியாது என பலரும் அவரை அவமதித்துள்ளார்கள்.
ஆனால், அவரோ கஷ்டப்பட்டு உழைத்து, தன் மகளை பிரித்தானியாவுக்கு அனுப்பி படிக்கவைத்துள்ளார்.
மகள் வெளியிட்டுள்ள நெகிழவைக்கும் வீடியோ
இங்கிலாந்தில் படித்து முடித்து, பட்டமும் பெற்ற அந்த இளம்பெண், தன் தந்தையை கௌரவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பட்டம் பெற்றபின், தன் தந்தை பணியாற்றும் இடத்துக்கே சென்ற அந்த இளம்பெண், கண்ணீர் மல்க தந்தையை அணைத்துக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி நெகிழவைத்துள்ளன.
இந்த வீடியோவை, தொழிலதிபர்கள், நடிகர்கள் முதலான பிரபலங்கள் முதல், சாதாரண மக்கள் வரை ஏராளமானோர் பகிர்ந்துவருவதுடன், அந்தப் பெண்ணுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகிறார்கள்.
நீங்கள் பெற்ற வெற்றிக்கு பாராட்டுகள், உங்களை இந்த நிலைமைக்கு உயர்த்திய உங்கள் தந்தைக்கு, இனி ஒரு சிறந்த வாழ்வை அமைத்துக்கொடுங்கள் என ஒருவர் பாராட்ட, இந்த வீடியோவைப் பார்த்ததும் என் கண்களில் ஏன் கண்ணீர் வருகிறது என வியக்கிறார் மற்றொருவர்.
இந்த வீடியோ வெளியிடப்பட்ட ஒரே நாளில், அதை 15 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |