விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு
விஜய்யை நெருங்கிய நபரின் தலையை நோக்கி பாதுகாவலர் துப்பாக்கியை நீட்டியதால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் மதுரை வருகை
தவெக தலைவர் விஜய், அரசியல் பணிகளுக்கு இடையே, தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஜன நாயகன் படப்பிடிப்பிற்காக மதுரை வழியாக கொடைக்கானல் சென்ற விஜய், படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்ப இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது விஜய்யை காண, ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.
தொண்டர் தலையில் துப்பாக்கி
அப்போது மதுரையை சேர்ந்த விஜய் ரசிகரான இன்பராஜ் என்பவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க விரும்பி, பாதுகாவலர்களை தாண்டி விஜய்யை நெருங்கி வந்தார்.
அப்போது அவரை தடுத்த பாதுகாவலர்கள், அந்த நபரின் தலையை நோக்கி துப்பாக்கியை நீட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, பாதுகாவலர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தை கண்டுகொள்ளாமல், விஜய் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்.
இது குறித்து பேசிய இன்பராஜ், "விஜய்க்காக மதுரையில் முதன்முதலில் ரசிகர் மன்றம் வைத்தது நான்தான். அவர் விமான நிலையம் வருவது தெரிந்து, அவருக்கு சால்வை அணிவிக்கதான் வந்தேன்.
பாதுகாவலர்கள் என் தலையை நோக்கி துப்பாக்கியை நீட்டியதே எனக்கு தெரியாது. பாதுகாப்பிற்காக தான் அவ்வாறு செய்திருப்பார்கள். இதில் எந்த வருத்தமும் இல்லை" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |