ரன்அவுட் தவறியதால் தொப்பியை வீசிய கேப்டன்: சதம் விளாசிய அடல்
Sediqullah atal 102 runs vs zimbabwe: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அடல் சதம் அடித்தார்.
முத்தரப்பு தொடரின் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தானின் செதிகுல்லா அடல் 3வது சதம் அடித்தார்.
இப்ராஹிம் ஜட்ரான் 90 ஓட்டங்கள்
ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் போட்டி அபு தாபியில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. குர்பாஸ் 25 ஓட்டங்களில் வெளியேற, இப்ராஹிம் ஜட்ரான் 96 பந்துகளில் 90 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 9 பவுண்டரிகள்) குவித்தார்.
ரஹ்மத் ஷா (7), ஓமர்சாய் (8) இருவரும் சொதப்ப, இளம் வீரர் செதிகுல்லா அடல் (Sediqullah Atal) நங்கூரமாக நின்று ஓட்டங்களை சேர்த்தார்.
அடல் சதம்
ஷாஹிடி ஒரு ரன் எடுக்க ஓட, ஜிம்பாப்வே அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா ஸ்டம்ப்பை நோக்கி பந்தை எறிந்தார்.
ஆனால், ரன்அவுட் தவறியதால் விரக்தியடைந்த ரஸா, ஆவேசமாக தனது தொப்பியை வீசி எறிந்தார். மறுமுனையில் துடுப்பாட்டம் செய்த செதிகுல்லா அடல் தனது 3வது ஒருநாள் சதத்தினை பதிவு செய்தார்.
அணியின் ஸ்கோர் 259 ஆக உயர செதிகுல்லா அடல் 102 ஓட்டங்கள் (1 sixer, 8 பவுண்டரிகள்) குவித்த நிலையில் ரஸா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஹஸ்மதுல்லா ஷாஹிதி 30 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 294 ஓட்டங்கள் குவித்தது. ஜிம்பாப்வே தரப்பில் மசுகு, எவன்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், முஸரபாணி 2 விக்கெட்டுகளும், ரஸா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
