அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக்கை: பிரித்தானிய அரசின் மற்றொரு சர்ச்சைக்குரிய திட்டம்
பிரித்தானியாவுக்கு வரும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதை சமாளிக்க, உள்துறை அலுவலகம் சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன சர்ச்சைக்குரிய திட்டம்?
ஸ்கொட்லாந்திலுள்ள Aberdeen நகரிலுள்ள ஹொட்டல்களில் 503 அகதிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், பிரித்தானியாவுக்கு வரும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
ஆகவே, அவர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கான செலவைக் குறைப்பதற்காக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஏற்கனவே திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
அது என்னவென்றால், ஏற்கனவே ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், புதிதாக வரும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுடன் தங்கள் ஹொட்டல் அறையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
கவலை தெரிவித்துள்ள ஸ்கொட்லாந்து அரசு
இந்த திட்டம் குறித்து, ஸ்கொட்லாந்து அரசே கவலை தெரிவித்துள்ளது. இப்படி ஹொட்டல் அறையைப் பகிர்ந்துகொள்வது அபாயகரமானது, அது ஏற்கனவே கஷ்டமான சூழலில் இருக்கும் மக்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என அரசு தெரிவித்துள்ளது.
அந்த ஹொட்டல்களை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு போதுமான இடம் இல்லை என்று கூறியுள்ளார்கள்.
ஹொட்டல் அறைகளில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்போது, அது அவர்களுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்துவதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்று கூறியுள்ள அவர்கள், தங்கள் விருப்பத்துக்கு மாறாக, யாரையும் தங்கள் அறையை பகிர்ந்துகொள்ள கட்டாயப்படுத்துவது சரியல்ல என்று கூறியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |