கனடா அமெரிக்க எல்லை வழியாக கனடாவுக்குள் நுழைந்த 94 புகலிடக்கோரிக்கையாளர்கள்: ஏற்பட்டுள்ள பிரச்சினை
கனடா அமெரிக்க எல்லை வழியாக கனடாவுக்குள் நுழைந்த 94 புகலிடக்கோரிக்கையாளர்கள், தங்களுக்கு உதவ அலுவலர்கள் இல்லாததால் கடும் அவதியுற்று வருவதாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடா அமெரிக்க எல்லை வழியாக கனடாவுக்குள் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்கள்
Newfoundland and Labradorஐச் சேர்ந்த சட்டத்தரணியான Michele Grant என்பவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Roxham Road பகுதியிலிருந்து St. John’s நகரத்துக்கு திருப்பிவிடப்பட்ட அந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவ, மாகாணத்தில் பெடரல் புலம்பெயர்தல் அலுவலர்கள் யாரும் இல்லை என்று கூறியுள்ளார் அவர்.
அப்படி அதிகாரிகள் மாகாணத்தில் இல்லாததால், இந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவில் சட்டப்படி தங்கும் உரிமையைப் பெற்றுத்தருவது அதிக சவால் உள்ளதாகிவிடும் என்கிறார் Michele.
இதற்கிடையில், இந்த மாகாண புலம்பெயர்தல் அலுவகத்தில் தொலைபேசியில் அழைத்தால் பதில் சொல்லக்கூட ஆள் இல்லை என்று கூறியுள்ள Newfoundland and Labrador மாகாண புலம்பெயர்தல் அமைச்சரான Gerry Byrne, பெடரல் அரசு அதற்காகவாவது புலம்பெயர்தல் அலுவலர்களை நியமிக்கவேண்டுமென கோபத்துடன் கூறியுள்ளார்.
கனடாவின் கிழக்கு ஓரத்தில் அமைந்துள்ள மாகாணத்தில் அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கி தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையுடன், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தேவையான சட்ட ரீதியான உதவிகளை மாகாணம் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார் Gerry.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |