உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சியை நிறைவு செய்த 6 பேர்: பட்டயச் சான்றிதழ் வழங்கிய சைவநெறிக்கூடம்

By Yashini Nov 09, 2026 07:30 AM GMT
Report

சைவநெறிக்கூடத்தில் பேராசிரியர் திரு. பிறங் ஸ்ரூப்பென் அவர்கள் பட்டயச்சான்று வழங்கினார்.

உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான பட்டையச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 07.11.26 பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் நடைபெற்றது.

திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார், திருநிறை. சிவபசி. குழந்தை விக்னேஸ்ரன், திருநிறை. லாவண்யா இலக்ஸ்மணன், திருவளர். அருளினி முருகவேள், திருவளர். சண்முகலிங்கம் சபீன், திருநிறை. தில்லையம்பலம் சிவகீர்த்தி ஆகியோர் கற்கையினை நிறைவுசெய்து பட்டயம் பெற்றுக்கொண்டனர்.

மாந்தர் வாழ்க்கையில் நோய், துயரம், உளவலி, தனிமை மற்றும் இழப்புகள் ஏற்படும்போது, மருத்துவச் சிகிச்சையுடன் உளவள ஆற்றுதலும் மெய்யில் (ஆன்மீக) துணையும் மிகவும் தேவையாகின்றது.

இத்தகைய சூழ்நிலைகளில் உதவி வேண்டும் மனிதர்களுக்குத் துணையாக இருந்து, அவர்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் மதித்து வழிகாட்டும் பணியே உளவள ஆற்றுப்படுத்துதல் (Seelsorge) எனப்படுகிறது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த துறையில் ஓராண்டுகளாக பயிற்சி பெற்று, தங்களது கல்விப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கான பட்டயச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பேராசிரியர் பிறங் மற்றும் ஏவா இருவரும் வழங்கிய இந்தப் பயிற்சியின் மூலம், நோயாளிகள், முதியவர்கள், துயரத்தில் இருப்பவர்கள் மற்றும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்பவர்களுடன் எவ்வாறு உரையாடுவது, அவர்களின் உளக்கவலையினை கவனமாகக் கேட்பது, அவர்களது சமயம், பண்பாடு மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பது போன்ற முக்கியமான விடயங்கள் கற்பிக்கப்பட்டன.

குறிப்பாக, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்குவதில் ஆற்றுப்படுத்துதல் முக்கியப் பங்கு வகிக்கிறது. மருத்துவர்கள் உடல் நலத்தைக் கவனிக்கும் அதேவேளை உளவள ஆற்றுப்படுத்துனர்கள், நோயாளிகளின் உளநிலை, அச்சம், கவலை மற்றும் மெய்யில் (ஆன்மீகத்) தேவைகளுக்குச் செவிசாய்த்து அவர்களுக்கு ஆறுதலாக இருக்கின்றனர்.

இந்தப் பயிற்சியை நிறைவு செய்து பட்டயச் சான்றிதழைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. அவர்கள் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் சமூக நலனுக்காகப் பயன்படுத்தி, தேவைப்படும் மக்களுக்கு அன்புடனும் மாந்தர் பேரன்புடன் சேவையாற்ற வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

உளவள ஆற்றுகை என்பது ஒருவரின் துயரத்தைக் கேட்பது மட்டுமல்ல, அவருடைய துயரத்தில் அவருக்குத் துணையாக இருந்து, நம்பிக்கையையும் மனவலிமையையும் ஏற்படுத்துவதாகும்.

தூரநோக்கமாக இக்கற்கையினை ஈழத்தில் பரவலாக கிடைக்கச்செய்யும் நோக்கம் அமைந்துள்ளது. இதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை சைவநெறிக்கூடம் மேற்கொள்ளும் என சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் பட்டமளிப்பின்போது தெரிவித்தார்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US