பப்ஜி காதலால் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த சீமா ஹைதருக்கு பெண் குழந்தை
காதலனை பார்க்க 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து ஓடிவந்த பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பெண் குழந்தை
பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதருக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் மீனா மீது காதல் வந்துள்ளது.
இவர் தன்னுடைய கணவரை விட்டுவிட்டு 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து சச்சின் மீனாவுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வந்தார். பின்பு, சீமா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்து மதத்திற்கு மாறிய பிறகு, சீமா ஹைதர் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோவிலில் சச்சின் மீனாவை மணந்தார்.
அவர்கள் இந்தியாவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அவரது எட்டு வயது மகன் ஃபர்ஹான் அலி, ராஜ் என்று பெயர் மாற்றப்பட்டார். அவரது மூன்று மகள்கள், ஃபர்வா (6), ஃபரிஹா படூல் (4), மற்றும் ஃபர்ஹா ஆகியோரின் பெயர்கள் முறையே பிரியங்கா, முன்னி மற்றும் பாரி என்று மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஹைதரின் முதல் கணவர் குலாம் ஹைதர் பாகிஸ்தானில் இருக்கிறார். இதையடுத்து, கிரேட்டர் நொய்டாவில் சச்சின் மீனா மற்றும் அவரது நான்கு குழந்தைகளுடன் வசிக்கும் சீமா ஹைதர், தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதருக்கு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது, தாயும் மகளும் நலமாக இருப்பதாக சீமா ஹைதரின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்போது பிறந்த குழந்தை சீமா ஹைதருக்கு ஐந்தாவது குழந்தையாகும். குழந்தை பிறப்பதற்கு முன்பு, கிரேட்டர் நொய்டாவில் ஒரு பாரம்பரிய விழா நடைபெற்றது.
இதில் ஏ.பி. சிங் மற்றும் அவரது தாயார் கலந்து கொண்டனர். இந்த விழாவானது பாரம்பரிய பாடல்களால் நிறைந்திருந்தது, அப்போது பாகிஸ்தானில் தனது கடந்தகால போராட்டங்களை நினைத்து சீமா உணர்ச்சிவசப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |