10 ஆண்டில் சேர்க்கவேண்டியதை திமுக ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது! இலங்கையில் ரணில் ஆட்சி வந்தாலும்.. கர்ஜித்த் சீமான்
இலங்கையில் ராஜபக்சே ஆட்சி மாறி ரணில் விக்ரமசிங்கே ஆட்சி வந்தாலும் அங்குள்ள பொருளாதார சிக்கல் தீராது என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், பத்து ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஒரு ஆண்டில் செய்துள்ளோம் என தி.மு.க., கூறுகிறது.
ஆம்! பத்து ஆண்டுகளில் ஊழல், லஞ்சமாக பெற்று சேர்க்க வேண்டியவற்றை ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டனர். இன்னும் 50 ஆண்டில் சேர்க்க வேண்டியதை அடுத்த நான்கே ஆண்டில் சேர்த்துவிடுவர்.
இலங்கையில் ராஜபக்ச ஆட்சி மாறி ரணில் விக்ரமசிங்கே ஆட்சி வந்தாலும் அங்குள்ள பொருளாதார சிக்கல் தீராது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈழத்தமிழர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் அவர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கியூ பிராஞ்சையும், சிறப்பு முகாமையும் கலைக்க வேண்டும்.
இவை இரண்டையும் கலைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.