நீ என்னப்பா பைத்தியம் என்ன வேணாலும் பேசுவ! சீமான் கொடுத்த அதிரடியான பதிலடி
எச்.ராஜா - சீமான் இடையே தொடரும் கருத்து மோதல்.
ராஜாவின் டுவிட்டர் பதிவுக்கு சீமான் கொடுத்துள்ள பதிலடி.
எச். ராஜா சொன்ன கருத்துக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என சமீபத்தில் பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்ட பதிவில், ''நீ காணாமல் போய்விடுவாய்'' என சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் பாணியில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீமான் இன்று பேசுகையில், எச்.ராஜாவுக்கு ஒன்று சொல்கிறேன். உனக்கு என்னப்பா நீ பைத்தியம், என்ன வேணா பேசலாம், நாங்கள் அப்படியா? கவனமாக தான் பேச வேண்டும்.
உங்கள் தலைவரான இந்திய நாட்டின் பிரதமர் மோடியுடனே நாங்கள் மோதுகிறோம். நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்? உங்கள் அப்பாவுக்கு அப்பா வந்தால் கூட என்னை ஒன்றும் செய்ய முடியாது.
எச்.ராஜா ஒரு பரிதாபம், அவரை விட்டுவிடுவோம். அவரின் குடும்பத்தார் மற்றும் கட்சியிடம் நான் அன்பாக கேட்டுக் கொள்வது என்னவெனில், எச்.ராஜாவை நல்ல மனநல மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளியுங்கள் என கூறியுள்ளார்.