கூட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் மேடையில் இருந்து கோவமாக இறங்கிய சீமான்.., வைரலாகும் வீடியோ
கூட்டத்தின் நடுவே சலசலப்பு ஏற்பட்டதால் மேடையில் இருந்து சீமான் கோவமாக இறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவமாக இறங்கும் வீடியோ
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுக்கூட்டம், மாநாடு என நடத்தி மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கூறும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொது கூட்டத்தில் சீமான் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரெனெ கூட்டத்தின் நடுவே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சீமான் மேடையில் இருந்து வேகமாக வெளியேறி பிரச்சனை நடைபெறும் இடத்திற்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதாவது, பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் பவுன்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று சலசலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
பின்னர் மேடையில் ஏறி, "சலசலப்புக்கும் சத்தத்திற்கு அஞ்சும் திராவிட நரிகள் அல்ல நாம்" என்று சீமான் பேசுகையில் தொண்டர்கள் கூச்சலிட்டனர்.
#Seeman 🤦♂️🤦♂️ pic.twitter.com/dukE994hgd
— Rajasekar (@sekartweets) August 17, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |