நான் வன்முறையை தூண்டிவிட்டேனா? வழக்குப்பதிவு குறித்து கொந்தளித்த சீமான்
வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்ப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று கூறியது எப்படி வன்முறையை தூண்டுவதாகும் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான் மீது வழக்குப்பதிவு
வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து பேசிய சீமான், வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது மற்றும் வேலை செய்வதை முறைப்படுத்த வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
வட மாநிலத்தவர் குறித்த பதிவு வேண்டும்
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், 'வட மாநிலத்தவர்கள் வருகையை முறைப்படுத்த வேண்டும் என்று தான் கேட்டேன். அவர்களின் அதிகப்படியான வருகையை பார்க்கும்போது ஒரு பயம் வருகிறது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
வட மாநிலத்தவர் குறித்த பதிவு ஒன்று இருந்தால் அவரை கண்காணிக்க முடியும். உடனே வந்து சீமான் வன்முறையை தூண்டிவிட்டார், இரு இனங்களுக்கு இடையே பகையை தூண்டிவிட்டார் என்றெல்லாம் வழக்கு போடுகிறார்கள்' என கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.