சென்னையில் பொலிஸாரால் சீமான் திடீர் கைது
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே முற்றுகை போராட்டம் நடந்தது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தபோது, என்னையும் கைது செய்யுங்கள் என்று சீமான் கூறி வேனில் ஏறினார்.
அவர்களுடன் என்னையும் கைது செய்யுங்கள் என்றவாறு சீமானும் வேனில் ஏறினார். அவரையும் பொலிஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில், சீமான் கைது செய்யப்பட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |