சீமானை கைது செய்ய வேண்டும்... அவர் பாஜக ஆளு! ஜோதிமணி வெளியிட்ட வீடியோ
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணிி, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த ஞாயிற்றுக் கிழமை, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிரபல யூ-டியூபர் சாட்டை துரைமுருகன், அரசியல் கட்சிகளின் தலைவர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்த பொலிசார் சாட்டை துரைமுருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்று கரூர் தொகுதி எம்பியான ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சீமான் ஒரு பாஜக அடிவருடி. பாஜக இம்மாதியான பயங்கரமான குற்றச்செயல்களில் இருந்து தங்களை காப்பாற்றும் என்கிற தைரியத்தில்தான் இப்படி பேசுகிறார்கள்.
சீமான் இந்த மேடையில் இருந்திருக்கிறார். அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இந்த பயங்கரவாத பேச்சு நடந்திருக்க முடியும். ஆகவே சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதற்குமுன்பு இதே சட்டத்தின்கீழ் இப்படி கைது நடந்திருக்கிறது.@mkstalin https://t.co/yDQEz7cHgl
— Jothimani (@jothims) October 11, 2021
இதற்கு தமிழ்மண்ணில் நாம் இடம் தரக்கூடாது. நாம் தமிழரின் இந்த பேச்சு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றம். தமிழகத்தின் அமைதியும்,அப்பாவி இளைஞர்களின் எதிர்காலமும் நாசமாகிவிடும்.
தமிழ்நாட்டின் அமைதியான எதிர்காலத்தில் ஒருதுளிகூட சமரசம் செய்துகொள்ளக்கூடாது.தமிழக அரசு கடிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் இந்த மேடையில் இருந்திருக்கிறார்.
அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இந்த பயங்கரவாத பேச்சு நடந்திருக்க முடியும்.
ஆகவே சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதற்கு முன்பு இதே சட்டத்தின்கீழ் இப்படி கைது நடந்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெயரை டேக் செய்துள்ளார்,