நவீன வசதிகள் கொண்ட புதிய சொகுசு கார் வாங்கிய சீமான்! விலை என்ன தெரியுமா?
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வாங்கியுள்ள புதிய காருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய நவீன கார் ஒன்றை வாங்கியுள்ளார். கருப்பு நிறத்தில் வாங்கப்பட்டுள்ள டொயாட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் ரக காருக்கு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
முன்னதாக திருப்போரூர் வந்த அவரை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் எல்லாளன் யூசுப், நகர செயலாளர் சின்னராஜ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் கோயிலின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.
dinakaran
இதைத் தொடர்ந்து அவரது காரின் சாவி கந்தசுவாமி கோயில் மூலவரின் பாதத்தில் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்து வழங்கப்பட்டது.
கோயில் அர்ச்சகர்கள் வெளியே வந்து காருக்கு பூஜை செய்து அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் தனது குழந்தைக்கு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மொட்டை அடித்து எடைக்கு எடை அரிசி, வெல்லம் வழங்கியிருந்தார். சீமான் வாங்கி உள்ள காரின் தற்போதை சந்தை மதிப்பு 49 லட்சத்து 57 ஆயிரம் என கூறப்படுகிறது.