துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்! ஓ.பி.எஸ் மனைவி மறைவுக்கு சீமான் வெளியிட்ட இரங்கல் பதிவு
ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் மறைவுக்கு டுவிட்டரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
வாழ்க்கைத்துணையை இழந்து பெருந்துயருற்றுள்ள ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தாயை இழந்து வாடும் தம்பிகள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், தங்கை கவிதா ஆகியோருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
— சீமான் (@SeemanOfficial) September 1, 2021
(1/2) pic.twitter.com/OtZouSP54B
வாழ்க்கைத்துணையை இழந்து பெருந்துயருற்றுள்ள ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தாயை இழந்து வாடும் தம்பிகள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், தங்கை கவிதா ஆகியோருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
— சீமான் (@SeemanOfficial) September 1, 2021
(2/2)