இவ்வளவு சிறிய வயதில் அவருக்கு நிகழ்ந்த மரணம் கொடுந்துயரமானது! பிரபல நடிகர் மறைவிற்கு சீமான் இரங்கல்
நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் தனது 46வது வயதில் மாரடைப்பால் காலமானார். குறைந்த வயதில் அவர் உயிரிழந்தது ரசிகர்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் புனித் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில், பெரும்புகழ் பெற்ற கன்னட நடிகரான தம்பி புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
பெரும்புகழ் பெற்ற கன்னட நடிகரான தம்பி புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தனித்துவமான நடிப்பாற்றலால் தன் தந்தையார் ராஜ்குமார் அவர்களைப் போலவே குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர். pic.twitter.com/I2dgMNAfDj
— சீமான் (@SeemanOfficial) October 29, 2021
தனித்துவமான நடிப்பாற்றலால் தன் தந்தையார் ராஜ்குமார் அவர்களைப் போலவே குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர் இவ்வளவு சிறிய வயதில் தம்பி புனித் ராஜ்குமார் அவர்களுக்கு நிகழ்ந்த மரணம் என்பது கொடுந்துயரமானது.
தம்பியை இழந்து வாடும் தம்பி சிவராஜ்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இரசிகப் பெருமக்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இவ்வளவு சிறிய வயதில் தம்பி புனித் ராஜ்குமார் அவர்களுக்கு நிகழ்ந்த மரணம் என்பது கொடுந்துயரமானது. தம்பியை இழந்து வாடும் தம்பி சிவராஜ்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இரசிகப் பெருமக்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.
— சீமான் (@SeemanOfficial) October 29, 2021