விஜயின் அரசியல் குறித்த கேள்விக்கு.., ஆவேசத்தை வெளிக்காட்டிய சீமான் மற்றும் இயக்குநர் அமீர்
தமிழகத்தில் விஜயின் அரசியல் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் இயக்குநர் அமீர் ஆவேசமாக பதில் அளித்துள்ளனர்.
திரைப்பட நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த இயக்குநர் அமீர் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சீமான் பேசியது
அப்போது, அரசியல்வாதிகளால் செய்ய முடியாததை நடிகர்கள் வந்து செய்வார்கள் என மக்கள் எதிர்பார்ப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று சீமானிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "மற்ற மாநிலங்களில் உள்ளதை விட தமிழகத்தில் திரைக்கவர்ச்சி அதிகமாக இருக்கிறது. அதை நாம் திணிக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
கேரளா, மேற்கு வங்க மாநிலங்களை விட தமிழகத்தில் கூடுதலாகவே இருக்கிறது. இப்போது, நீங்கள் சொல்லும் ஹீரோ மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி விட்டால் அவர் ரீல் ஹீரோவில் இருந்து ரியல் ஹீரோவாக மாறிவிடுவார்" என்றார்.
அமீர் பேசியது
இதையடுத்து குறுக்கிட்டு பேசிய அமீர், "10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹீரோக்கள் வந்து மாற்றிவிடுவார்கள் என்று சொன்னார்கள்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளின் தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தி மண்ணையும், மலையையும், விலங்கையும் பற்றி பேசி மாற்றத்தை கொண்டு வந்தவர் சீமான்.
அப்படியென்றால் அவர் ஹீரோ இல்லையா? தனி ஆளாக நின்று 30 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். அவர் ஏற்கனவே மாற்றத்தை தொடங்கி விட்டார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |