2026ல் விஜய்யின் அரசியல் பயணம்! சீமான் பரபரப்பு பேட்டி
சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய், இதுமட்டுமா கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து வைத்துள்ளார்.
சமீபகாலமாக ரசிர்களின் எதிர்பார்ப்பே விஜய் அரசியலுக்குள் நுழைவாரா இல்லையா என்பது தான்.
30 ஆண்டுகளாக கடின உழைப்புடன் தற்போதைய நிலையை எட்டியுள்ள விஜய், இந்த புகழை அரசியலுக்குள் நுழைய பயன்படுத்திக் கொள்வாரா என்ற கேள்வி பலரிடத்திலும் எழாமல் இல்லை.
அவர் படங்களில் அரசியல் ரீதியான வசனங்களோ, பாடல் வரிகளோ இருந்தாலும் இந்த எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே செல்கிறது.
இதற்கிடையே விஜய்யின் அரசியல் பயணம் 2024 மக்களவை தேர்தலா, 2026 சட்டமன்ற தேர்தலா என்ற பேச்சும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்து பதிலளித்துள்ளார்.
அதாவது விஜய் குறித்த கேள்விக்கு, கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கியபோது வரவேற்றோம், இதேபோன்று விஜய் அரசியலுக்குள் நுழைந்தாலும் வரவேற்போம்.
2026ல் அரசியலுக்குள் வந்துவிடுவார் என தெரிவித்துள்ளார்.
சீமானின் கூற்றுப்படி, சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் அரசியல் பயணம் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது