என் மகள் உடலில் இருந்த நகைகள் எங்கேனு தெரியல! சீமானிடம் குமுறிய மாணவி ஸ்ரீமதியின் தாய் வீடியோ
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் வீட்டுக்குச் சென்ற நாம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
சீமானை சந்தித்த போது ஸ்ரீமதியின் தாய் செல்வி அவரிடம், பிணவறைக்கு ஸ்ரீமதி உடலை எடுத்து செல்லும் முன் அவர் காது, மூக்கில் அணிந்திருந்த பொருட்களை எடுத்தனர். அந்த நகையெல்லாம் யாரிடம் உள்ளது என்பது இந்த நிமிடம் வரை எனக்கு தெரியவில்லை என்றார்.
மேலும் சீமானிடம் செல்வி கூறுகையில், பாப்பா (ஸ்ரீமதி) தங்கியிருந்த அறைக்குள் சென்று அவளின் புத்தகங்கள், பொருட்களை பார்க்க வேண்டும் என கூறிய போது அதற்கு அனுமதிக்காத பொலிசார் அறையை இழுத்து மூடினார்கள்.
கள்ளக்குறிச்சி மாணவி தங்கை ஸ்ரீமதி மர்மமரணம்.தங்கை ஸ்ரீமதியின் பெற்றோரை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் ஆறுதல் செய்தியாளர் சந்திப்பு...#Justiceforsrimathi #kallakuruchi #kallakurichiprotest #kallakuruchiviolence #சீமான் #நாம்தமிழர்கட்சி pic.twitter.com/r7q3W9jAs8
— ????????????? (@ntkwillpower) August 17, 2022
எங்கே என் மகள் என கேட்டதற்கு, நாங்கள் செல்வதற்கு முன்னரே பிணவறையில் சடலத்தை கொண்டு சென்று போட்டுவிட்டனர் என குமுறினார். பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவங்க கண்ணீரும் கதறலும் தான் எங்களின் கோரிக்கையாக உள்ளது.
ஸ்ரீமதி இறந்து 31 நாட்கள் ஆகிவிட்டது. அவர் தற்கொலை செய்வதற்கான காரணம் எதுவும் இல்லை. தற்கொலை என்றாலும் இவ்வளவு தூரம் இழுக்க வேண்டியதில்லை. எதனால் தற்கொலை செய்தார் என எங்களுக்கு நிரூபித்தால் போதும்.
மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை செய்து, பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதிவிசாரணைக்கோரும் பெற்றோர்களை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து, ஆறுதல்கூறி, அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர துணைநிற்போம் என்று உறுதியளித்தேன். pic.twitter.com/2jrgTJABVr
— சீமான் (@SeemanOfficial) August 17, 2022
ஆற்றமுடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் மாணவியின் பெற்றோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.
— சீமான் (@SeemanOfficial) August 17, 2022
மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை செய்து, பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
(2/2) pic.twitter.com/JplHv0ONkm