விஜயலட்சுமிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு சீமான் நோட்டீஸ்
நடிகை விஜயலட்சுமிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சீமான் - விஜயலட்சுமி விவகாரம்
சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், அவர், என்னை பயன்படுத்திக் கொண்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி கமிஷனர் அலுவலகம் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், சீமான் அரசியலில் ஒரு நிலை வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறிய நிலையில், நான் ஏழு முறை கருவுற்றேன். ஆனால், என்னை கட்டாய நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரை கொடுத்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த சீமான் தன்னை போல 6 பேர் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்திருக்கிறார் என்று கூறினார். இந்த விவகாரத்தில், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும் அவரது வழக்கறிஞரும் நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
ரூ.1 கோடி கேட்டு சீமான் நோட்டீஸ்
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி மற்றும் வீர லட்சுமிக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு சீமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பாலியல் தொடர்பாக பொதுவெளியில் தன்னை அவதூறாக பேசி வரும் விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகிய இருவரும் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |