த்தூ... இப்படி வெற்றி பெறுவதற்கு சாகலாம்! கொந்தளித்து பேசிய சீமான்
குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான் பேட்டி
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பில் மீண்டும் பா.ஜ.க தான் ஆட்சி அமைக்கும் என சொல்வது பற்றி கருத்து கேட்டார். அதற்கு சீமான், குஜராத் தேர்தல் வாக்குப் பதிவின்போது ஒரே ஆள் மொத்த வாக்கையும் பதிவு செய்கிறார்.
இப்படி வெற்றி பெறுவதற்கு
இது குறித்த காணொலி உள்ளது. இதை வெற்றி என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா, இப்படி வெற்றி பெறுவதற்கு பதில் தூக்கிட்டு சாகலாம், விஷம் குடித்து சாகலாம், அது ஒரு வெற்றியா என காறி துப்பியப்படி பேசினார்.