நான் ஜெயிப்பேனு நினைச்சேன்... தேர்தல் தோல்வி குறித்து முதன் முறையாக வேதனையுடன் பேசிய சீமான் வீடியோ!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தேர்தல் தோல்வி குறித்து முதன் முறையாக வேதனையுடன் பேசியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் 6-ஆம் திகதி நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ஆம் திகதி நடைபெற்று முடிந்தது. இதில் திமுக தலைமையிலான கட்சி அதிக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதால், ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இதில் அதிமுக எதிர்கட்சியாகவும், மூன்றாவது மிகப் பெரும் கட்சியாக சீமானின் நாம் தமிழர் கட்சியும் உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவு குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்த சீமான், முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எனக்கு இந்த தேர்தல் முடிவுகள் எல்லாம் பிரச்சனை இல்லை, 2016-ஆம் ஆண்டு தேர்தலில் நிற்க முடிவு செய்த நாங்கள் அந்த தேர்தலில், 1.1 வாக்குகள் பெற்றோம், அதே போன்று 2019 தேர்தலில் 4 விழுக்காடு பெற்றோம். இப்போது 7 சதவீத விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளோம்.
எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. இந்தளவிற்கு பேசியுள்ளோம், இந்தளவிற்கு நாங்கள் வாக்குகளை கொடுத்துள்ளோம், இன்னும் ஒரு 10 லட்சம் வாக்குகளை மக்கள் போட்டிருக்கலாம்,
அதுமட்டும் தான் வருத்தம். நான் மட்டும் போவேன் என்பது இல்லை, அதில் எனக்கு வருத்தம் இல்லை, இருந்தாலும் வெற்றி பெற்றிருந்தால், சட்டமன்றத்தின் உள்ளே போயிருக்கலாம், மக்களின் குரலாக ஒலித்திருப்போம். இது மக்களின் தோல்வி என்று தான் கூறுவேன்,
இந்த தேர்தலை பொறுத்தவரை நான், தங்கை காளியம்மாள், தம்பி காசிராமன் என ஒரு ஐந்து பேர் வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை.
இன்று இல்லையென்றால், நாளை சட்டமன்றத்திற்குள் செல்வோம், இலக்கை நோக்கி பயணிப்போம், நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என்று ஒரு வித வருத்ததுடனே சீமான் பேசியுள்ளார்.