சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும்.., ஸ்டோரியில் கொலை மிரட்டல் விடுத்த நபர்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீமானுக்கு கொலை மிரட்டல்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், "தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில் அவர், "சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும். விரைவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும்" என்று கூறியுள்ளதாக புகார் வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |