அவர் பட்ட அசிங்கத்தை நானும் படணுமா? மண்டி போடனுமா? ஆவேசப்பட்ட நாம் தமிழர் சீமான்
கூட்டணிக்கு வருமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்.
அதற்கு அவர் அளித்துள்ள பதில்.
தேர்தலில் 4 சீட்டுகளுக்கு திருமாவளவன் பட்ட அசிங்கத்தை நானும் பட வேண்டுமா என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு திமுகவும் வேண்டாம்; அதிமுகவும் வேண்டாம். காங்கிரசும் வேண்டாம். பிஜேபியும் வேண்டாம். இப்படி எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னத்தை சாதிக்க போகிறீர்கள்?
சனாதன தர்மத்தை தலைதூக்கவிடக்கூடாது. 2024 தேர்தலில் பாஜகவை ஜெயிக்க விடக்கூடாது. அதற்காக பிடிக்காவிட்டாலும் நாமெல்லாம் ஒன்றுசேர வேண்டும் என சீமானை திமுக கூட்டணிக்கு வருமாறு அழைத்தார்.
இது தொடர்பாக சீமான் அளித்த பதிலில், திருமாவளவன் சொல்வது சரிதான்.
அதை நான் ஏற்கவில்லை. ஆனால் திருமாவளவன் ஏற்கனவே சொன்னது மறந்துவிடவில்லை. நான்கு சீட்டுகளுக்கு நடையாய் நடக்க வேண்டியுள்ளது. மண்டியிட வேண்டியுள்ளது, கெஞ்ச வேண்டியுள்ளது என்றீர்களே?
திருமாவளவன் பட்ட அந்த அசிங்கத்தை நானும் படணுமா? அவரால் முடியாது என்றால் இருக்கட்டும். தம்பி நான் போராடி பார்க்கிறேன். கெஜ்ரிவால் பஞ்சாபிலும், டெல்லியிலும் போராடி வெற்றி பெறவில்லையா? வெற்றி பெற முடியாது என்று சொல்லக்கூடாது.
இனி வரும் தேர்தலிலும் நாம் தமிழர் தனித்தே களம் காணும் என கூறியுள்ளார்.