வேலைக்கு வந்த பெண்ணின் முடியை வெட்டி, மிளகாய் கரைச்சல் குடிக்க வைத்த எம்.எல்.ஏ மருமகள்! கொந்தளித்த சீமான்
சென்னையில் வீட்டுவேலைக்கு சென்ற இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய எம்எல்ஏ மகன், மருமகளை கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டிற்கு, ஒப்பந்த அடிப்படையில் இளம்பெண்ணொருவர் வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு அப்பெண் பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மிளகாய் கரைச்சலை குடிக்க வைப்பது, அடித்து உதைப்பது, கத்தியால் கீறுவது, சூடு வைப்பது என பல இன்னல்களுக்கு அப்பெண் ஆளாகியுள்ளார்.
தற்போது அவர் ஊடகத்திடம் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை கூறியதன் மூலம் இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுதொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், 'பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் கொத்தடிமை போல நடத்தி, கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தியானது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இளம் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கித் துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாக சிறைப்படுத்த வேண்டும்' என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |