நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? சீமான் கூறிய பதில்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு நாம் தமிழர் சீமான் பதில் அளித்தார்.
பாஜக மீது விமர்சனம்
ஊடகத்தினரை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பல்வேறு விடயங்கள் குறித்து பேசினார்.
தமிழகத்தில் பாஜக-வை நாம் தமிழர் தான் பெரிய கட்சி என்று கூறிய சீமான். மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால் நாடே சுடுகாடாகி விடும் என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவர் பேசும்போது, அவர் சிகிச்சை பெற்று வருவது கருத்து கூற முடியாது. ஆனால், செந்தில் பாலாஜிக்கு நாளை நடைபெறும் அறுவை சிகிச்சையை நேரலை செய்தால், உண்மையிலேயே என்ன நடக்கிறது என தெரியும். உடல் நலத்தை காரணம் காட்டி அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்து விடுவார்கள் என கூறினார்.
நடிகர் விஜய்யின் அரசியல்
மேலும், நடிகர் விஜய் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கியதை சீமான் பாராட்டினார். விஜய்யின் அரசியல் குறித்து சீமான் கூறுகையில், 'நடிகர் விஜய் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார். அவர் ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளமாக வாங்குகிறார்.
அதிகளவு ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். அவரது உதவி எனக்கு தேவையில்லை. நன்மை செய்யும் நோக்கில் அவர் அரசியலுக்கு வந்தால் தவறில்லை' என தெரிவித்துள்ளார்.
விஜய் அரசிலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, நான் ஏன் அவருடன் கூட்டணி அமைக்க வேண்டும்? எங்கள் கொள்கை, கோட்பாடு வேறு என சீமான் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |