உன்னை வாவென்று யாரு கூப்பிட்டது? தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை பேச்சினை நாம் தமிழர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களுக்கு சேவை செய்ய
மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய், அடுத்ததாக திருவாரூர் செல்ல உள்ளார்.
அவர் தனது முதல் மாநாட்டில், நடிகராக உச்சத்தில் இருக்கும்போதே அதனை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வருவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதனைக் குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாவென்று உன் வீட்டு வாசலில் யார் நின்றது?
விஜய் குறித்து மேடையில் பேசிய சீமான், "நான் என்னுடைய உச்சத்தை விட்டுவிட்டு, நான் அவ்வளவு வருமானத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.,வாவென்று உன் வீட்டு வாசலில் யார் நின்றது? ஏன் இந்த மாதிரி பேசிக் கொண்டிருக்கிறாய்? சேவை செய்ய வந்தால் சேவை செய்.
அன்பு சகோதரன் அஜித்தும், அய்யா ரஜினிகாந்த் அவர்களும் தங்களுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. அய்யா எம்ஜிஆர் எழுதிவைத்தி படிக்காமல் பேசுவார். அய்யா விஜயகாந்த் மனதில் இருந்து பேசுவார்.
அய்யா ஸ்டாலின் கூட சின்ன சீட்டை பார்த்து படித்து பேசுவார்.
ஆனால் என் தம்பியும், அய்யா எடப்பாடியும் முழு சீட்டை பார்த்து படிப்பார்கள். பார்த்து எழுதும் மாணவன், படித்து எழுதும் மாணவன்; எந்த மாணவன் நல்ல மாணவன் என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்" என விளாசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |