எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு..15 வருஷமாக ஒரு பெண் தப்பா பேசுறாங்க - சீமான்
ஃபெலிக்ஸ் என்ன தவறு செய்தார் என்று நாம் தமிழர் சீமான் ஊடகத்திடம் கேள்வி எழுப்பினார்.
பெண் காவலர்களை யூடியூப்பில் அவதூறாக பேசியதற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தனது சேனலில் அவரை நேர்காணல் ஃபெலிக்ஸ் என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னைப் பற்றி ஒரு பெண் தவறாக பேசுவதை யாரும் கண்டுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
அவர் பேசும்போது, ''தம்பி சவுக்கு சங்கர் பேசியது தவறு. தனிப்பட்ட முறையில் அதனை விளக்க நான் கடமைப்பட்டுள்ளேன். ஒரு பெண் என்னைப் பற்றி தவறாக 15 ஆண்டுகளாக பேசிக்கொண்டிருந்தபோது, நீங்கள் ஊடகவியலாளர்கள், அரசு எல்லாம் அதைப் பற்றி கவலைப்படாமல் கொண்டாடிக் கொண்டு தான் இருந்தீர்கள்.
எனக்கு ஒரு குடும்பம் இருக்கு. எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. எனக்கு மனைவி, அம்மா, அப்பா எல்லாரும் இருக்காங்க அப்படிங்கறது எல்லாம் யாருக்கும் நினைவில்லை.
ADGP அருண் அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்காங்க, இருவருமே கல்லூரியில் படிக்கிறார்கள். அவங்க என் தங்கச்சிங்க. தம்பி சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அய்யா ADGP அருண் அவர்களுடன் இணைத்து பேசியது தவறு.
அதற்கான கைது நடவடிக்கையை நான் கண்டிக்கவில்லை. ஆனால் குண்டாசில் போடுவது, கஞ்சா இதெல்லாம் அதிகப்படியா தெரிகிறது. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இதெல்லாம். ஃபெலிக்ஸ் என்ன செய்தார்? நான் என் தலைவரை ஆதரிச்சு பேசுறேனா நான் தான் பொறுப்பு ஏற்கணும். எங்களை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?'' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |