கள் இறக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சீமான்
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் நடைபெறவுள்ள கள் இறக்கும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் ஆதரவு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் வரும் ஜனவரி 21-ம் திகதி நடைபெறும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கிச் சந்தைப்படுத்தும் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவையும் அளிக்கும்.
அத்துடன் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வெல்லவும் துணைநிற்கும். தமிழர் வாழ்வியலின் ஒரு கூறாக விளங்கிய கள்ளுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து, கள் இறக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தொடர்ச்சியாகப் பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ்நாடு கள் இயக்கத்துக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
மரங்களில் இருந்து கள்ளை இறக்கி விற்பனை செய்வதற்கு மற்ற மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டிலும் கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.
இந்நிலையில் தான், தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் வரும் 2025 ஜன.21-ம் திகதி பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டத்தை தமிழ்நாடு கள் இயக்கம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |