விஜய் அளித்த நிவாரணம் கூட மற்றவர்கள் அளிக்கவில்லையே- விஜய்க்கு சீமான் ஆதரவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரணம் அளித்ததற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நிவாரணம் அளித்த விஜய்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்னை பனையூரில் தவெக அலுவலகத்திற்கு விஜய் வரவழைத்தார்.
பின் அவர்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்களை விஜய் வழங்கினார்.
நிவாரண பொருட்களில் வேஷ்டி, சட்டை, பெட்ஷீட் , மளிகை பொருட்கள் என ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.
இந்நிலையில், விஜய் பனையூர் அலுவலகத்தில் வைத்து நிவாரணம் வழங்கியது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
சீமான் ஆதரவு
"தவெக தலைவர் விஜய் களத்தில் நிற்க முடியவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்ததை பாராட்டலாம் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மேலும் விஜய் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றால் பாதிக்கப்பட்டோரின் கூட்டத்தை விட அவரை பார்க்க வந்தோரின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் களத்திற்கு விஜய் செல்லவில்லை.
கூட்டம் கூடி பிரச்சனை ஏற்பட்டால் அதற்கும் விமர்சனம் செய்வீர்கள். விஜய் கொடுக்க வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம்தான்.
விஜய் அளித்த நிவாரணத்தை கூட மற்றவர்கள் அளிக்கவில்லையே? நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை பாராட்ட வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |