அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன் - சீமான் அறிவிப்பு
seeman to contest in ambasamudram by election: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்டி
2026 தமிழ்நாடுசட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 6 வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.
இதில், 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது.

இந்நிலையில், மீதமுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
பொது வேட்பாளரா என கேட்கப்பட்ட கேள்விக்கு, அனைத்து இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் போட்டியிட்டு வருகிறது. நான் எப்போதும் பொது வேட்பாளர்.
அனைத்து சாதி, மதத்திற்கான பொதுவேட்பாளர் நாம் தமிழர் கட்சி. திமுக அதிமுக போட்டியிட்டாலும், போட்டியிடாவிட்டாலும் நான் போட்டியிடுவேன்" என தெரிவித்துள்ளார்.