சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?.., சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
நாம் தமிழர் கட்சி ஒருக்கிணைப்பாளர் சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், நடிகை விஜயலட்சுமி தன் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு மீது பிப்ரவரி 19ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதனிடையே, தன் மீதான புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், கடந்த 2008ஆம் ஆண்டு மதுரை கோயிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக வாதமிடப்பட்டது.
மேலும் 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் தொடர்பு வைத்துள்ளார் என்றும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், தன் மீதான புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் 12 வாரங்களுக்குள் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |