நடிகை விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டிற்கு சீமான் என்ன பதில் சொல்லியிருக்கிறார்?
நடிகை விஜயலக்ஷ்மியின் புகாருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011ஆம் ஆண்டு சீமான் மீது நடிகை விஜயலக்ஷ்மி புகாரளித்ததை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மீண்டும் புகாரளித்துள்ளார்.
அப்போது விஜயலக்ஷ்மி சீமானை நம்பி இந்த இடத்தில் நிற்பதாகவும், அவரை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜயலக்ஷ்மி புகார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ''அமைதியாக கடந்து போகவேண்டும் என்று நினைக்கிறேன் என்றும், எனக்கு பல கோடிக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது, மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் இதை பற்றி பேசுவது கேவலமாக இருக்கிறது'' என சீமான் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |