தோற்றவர்கள் பொறுத்து தான் போக வேண்டும்: கம்பீர்-விராட் கோலி மோதலை கடுமையாக விமர்சித்த சேவாக்
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், ஜபிஎல் போட்டியின் போது கம்பீர்-விராட் கோலி மோதலை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கம்பீர், விராட் கோலி மோதல்
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் லக்னோ அணியின் வீரர் நவீன் உல் ஹக் என்பவருக்கும், பெங்களூர் அணியின் விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஆட்டத்தின் முடிவில் பெங்களூர் அணி வெற்றி பெற்றதை அடுத்து, கைல் மேயர்ஸ் கோலியுடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த லக்னோ அணியின் பயிற்சியாளர் கம்பீர் கைல் மேயர்ஸை இழுத்து சென்றார்.
இதனால் கோலி மற்றும் கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இச்சம்பவத்திற்கு பின் கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் பாரிய அபராதம் விதித்தது.
சேவாக் விமர்சனம்
இச்சம்பவத்தை பற்றி CRICBUZZ முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கிடம் கேள்வி எழுப்பபட்ட போது அதற்கு அவர்
’நான் போட்டி முடிந்ததும் டிவியை அணைத்து விட்டு தூங்கிவிட்டேன். காலையில் தான் இந்த பிரச்சனையே எனக்கு தெரிந்தது. பிரச்சனை என்னவாக இருந்தாலும் தோற்ற அணி எப்போதும் பொறுத்து தான் போக வேண்டும்.’
@samayam
’ஜெயித்த அணி கொண்டாட தான் செய்வார்கள். எதற்காக தேவையில்லாமல் சண்டை போட வேண்டும். மேலும் சண்டையிட்ட இருவரும் ஜாம்பவான்கள், இவர்கள் சண்டையிட்டு கொள்வது அவர்களை பின் தொடரும் பல்லாயிர கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணம் ஆகி விடும்.’
’இப்போதுல்ல குழந்தைகள் எல்லாம் உங்கள் உதட்டு அசைவை வைத்தே நீங்கள் பேசும் கெட்ட வார்தைகளை கண்டு பிடித்து விடுவார்கள். எனவே வீரர்கள் இதனை மனதில் வைத்து செயல் பட்டால் இது போல அசம்பாவிதங்கள் நடக்காது’ என சேவாக் விமர்சித்துள்ளார்.