மிரள வைத்த 14 வயது வீரர்: அடுத்த IPLயில் பார்க்க முடியாமலும் போகலாம் - அதிர்ச்சி கொடுத்த சேவாக்
ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் அறிமுகமாகியுள்ள சூர்யவன்ஷியை, அடுத்த சீசனில் பார்க்க முடியாமலும் போகலாம் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
14 வயது வீரர்
நடப்பு ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி என்ற 14 வயது வீரர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அவர் தனது முதல் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி பார்வையாளர்களை மிரள வைத்தார்.
முதல் போட்டியில் 20 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் விளாசிய வைபவ், நேற்றையப் போட்டியில் 16 (12) ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த நிலையில் அடுத்த சீஸனில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவாரா என்ற சந்தேகத்தை இந்திய அணியின் அதிரடி வீரரான விரேந்திர சேவாக் கிளப்பியுள்ளார்.
அவர் கூறுகையில், "நன்றாக செய்ததற்காகப் பாராட்டப்படுவீர்கள், சிறப்பாக செய்யாததற்காக விமர்சிக்கப்படுவீர்கள் என்று தெரிந்தும் நீங்கள் வெளியேறினால், நீங்கள் நிலையாகவே இருப்பீர்கள். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் இருந்து புகழ்பெறும் பல வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர்கள் எதையும் செய்வதில்லை, ஏனென்றால் அவர்கள் ஒரு நட்சத்திர வீரராகி விட்டதாக நினைக்கிறார்கள்" என்றார்.
குறுகிய கால திருப்தி
மேலும் அவர், "சூர்யவன்ஷி ஐபிஎல்லில் 20 ஆண்டுகள் விளையாடுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். விராட் கோஹ்லிப் பாருங்கள். அவர் 19 வயதில் விளையாடத் தொடங்கினார். இப்போது அவர் 18 சீசன்களிலும் விளையாடியுள்ளார்.
அதைத்தான் அவர் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். குறுகிய கால திருப்தி ஒரு நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை குறைக்கக்கூடும். இந்த ஐபிஎல்லில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அவர் இப்போது ஒரு கோடீஸ்வரர் என்று நினைத்து, ஒரு சிறந்த அறிமுகத்தைப் பெற்றார். முதல் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். ஒருவேளை அடுத்த ஆண்டு அவரைப் பார்க்க முடியாமல் போகலாம்" என தெரிவித்துள்ளார்.
சேவாக்கின் இந்த கூற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |