ரோகித் சர்மாவின் ரசிகர்களை கடுப்பேற்றிய சேவாக்! சரமாரியான பதிலடியால் அளித்த விளக்கம்
பேட் கம்மின்ஸ்ஸின் ஆட்டத்தை புகழ்ந்தபடி சேவாக் செய்த ட்வீட் ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
கொல்கத்தா அணி வீரர் பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். கம்மின்ஸ்ஸின் மிரட்டலான ஆட்டத்தை பலரும் புகழ்ந்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் செய்த ட்வீட் ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டியது.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'வாயில் இருந்த துண்டை பறித்தார் கம்மின்ஸ்,, மன்னிக்கவும், வடா பாவை பறித்தார். 15 பந்துகளில் 56 ஓட்டங்கள் என்பது மிகவும் வெறித்தனமான ஆட்டம்' என பதிவிட்டிருந்தார்.
Moonh se nivala cheen liya ,, sorry vada pav cheen liya.
— Virender Sehwag (@virendersehwag) April 6, 2022
Pat Cummins, one of the most insane display of clean hitting , 15 ball 56 …
Jeera Batti #MIvKKR pic.twitter.com/Npi2TybgP9
முன்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததால் சோகத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள், சேவாக்கின் இந்த ட்விட்டைக் கண்டு எரிச்சலடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சேவாக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்தனர். இந்நிலையில், தனது ட்விட்டிற்கு சேவாக் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் கூறுகையில், 'வடா பாவ் என்பது மும்பையை குறிக்கிறது. ஏனெனில் மும்பை வடா பாவில் செழித்து வளரும் நகரம். உங்களில் பெரும்பாலானவர்களை விட ரோஹித்தின் பேட்டிங்கிற்கு நான் பெரிய ரசிகன்' என தெரிவித்துள்ளார்.