ரஹானே தேர்வு குறித்து தோனியை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்
ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிய ரஹானேவை பாராட்டிய வீரேந்திர சேவாக் அவரது தேர்வு குறித்து டோனியை விமர்சித்துள்ளார்.
அதிரடியாக ஆடிய ரஹானே
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ்(MI) அணியினருக்கு இடையேயான போட்டியில் (Ajinkya Rahane)அஜின்கியா ரஹானேவிற்கு வாய்ப்பு தரப்பட்டது.
முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் ,சான்ட்னர், துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் கான்வே சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ரஹானே அதிரடியாக ஆடினார்.
அவர் 27 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிகவும் குறைந்த தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ரஹானே சிறப்பாக ஆடியதால் ரசிகர்கள் பலரும் தோனியின் கேப்டன்சியை பாராட்டினர்.
சேவாக் விமர்சனம்
இந்த நிலையில் போட்டி முடிவுக்கு பிறகு ரஹானேவின் ஆட்டத்தை பாராட்டிய சேவாக் தோனியின்(MS Dhoni) கேப்டன்சியை முன்னாள் கிரிக்கெட் வீரர்
வீரேந்திர சேவாக்(Virender Sehwag) விமர்சித்துள்ளார்.
Cricbuzzல் ரஹானேவின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய ரோகன் கவாஸ்கரிடம்
“இந்திய வீரர் ரஹானே மெதுவாக விளையாடுகிறார். அவரால் ரோட்டேட் செய்ய முடியவில்லை எனக் கூறி தோனி தான், அவரை ஒரு நாள் போட்டிகளில் சேர்க்கவில்லை. ஆனால் இப்போது சிஎஸ்கே அணிக்கு அனுபவம் தேவை என இதே தோனி தான் ராஹானேவை அணியில் எடுத்துள்ளார்” என சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஹானே, 2016 இல் தோனியின் தலைமையில் இந்திய T20 அணியில் ஆடவில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான T20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் ஆடியதே இந்தியாவுக்காக ரஹானே விளையாடிய கடைசி போட்டியாகும்.