டெஸ்ட், ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் கோலி விலக வேண்டுமா? தனது விருப்பத்தை வெளிப்படுத்திய சேவாக்
டெஸ்ட், ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் கோலி விலக வேண்டுமா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்திய முன்னாள் வீரர் சேவாக் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று நமீபியாவுக்கு எதிரான டி20 போட்டிக்கு பிறகு கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார்.
கோலிக்கு பதிலாக இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகிர் சர்மா நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி20 கேப்டன் பதிவியலிருந்து விலகுவதாக அறிவித்த கோலி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் கேப்டனாக தொடருவேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டி20 போட்டிகள் போல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விலகி, கோலி வீரராக தொடர வேண்டுமா? என ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் துணை கேப்டன் வீரேந்திர சேவாக் தனது விருப்பத்தை பகிர்ந்துள்ளார்.
அது விராட் கோலி எடுக்க வேண்டிய முடிவு, ஆனால் அவர் டெஸ்ட், ஒரு நாள் கேப்டன்சியிலிருந்து விலக நான் விரும்பவில்லை.
அவர் வீரராக மட்டும் விளையாட வேண்டும் என்றால், அது அவருடைய முடிவு.
கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது. கேப்டனாக அவரது சாதனைகள் அபாரம்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக தொடர வேண்டுமா இல்லையா என்பது அவரது தனிப்பட்ட முடிவு.
என்னைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவை வழிநடத்த வேண்டும், ஏனென்றால் அவர் ஒரு நல்ல வீரர், இந்திய அணியை முன்னோக்கி வழிநடத்தும் ஒரு சிறந்த கேப்டன் என சேவாக் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.