இது மட்டும் அப்போ இருந்திருந்தா... சச்சின் உள்ளிட்ட யாரும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கமாட்டோம்
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சேவாக், தங்கள் காலத்தில் யோ-யோ டெஸ்ட் அவசியமானதாக இருந்தால், சச்சின் உள்ளிட்ட யாரும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய, தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, யோ-யோ டெஸ்ட்டில் தெரிவு ஆகாததால், அவரால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட முடியவில்லை. திறமை இருந்தால், மட்டும் பத்தாது,
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்திர சேவாக் ரசிக ஒருவர் இந்த யோ-யோ டெஸ்ட் குறித்து கேட்க, அதற்கு சேவாக் தற்போது மேற்கொள்ளப்படும் யோ-யோ டெஸ்ட் தங்களது காலத்தில் இருந்திருந்தால் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லஷ்மன் போன்றோர் தேறியிருக்க மாட்டார்கள்
தங்களது காலத்தில் நடத்தப்பட்ட பீப் டெஸ்ட்டில் தேற தேவையான 12.5 மார்க்குகளை கூட எடுக்க முடியாத முன்னணி வீரர்கள் இருந்ததாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கிரிக்கெட் வீரர்களுக்கு பிட்னஸ் மட்டும் இருந்து திறமை இல்லாமல் போனால் என்ன நடக்கும் என்பதை தேர்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
