வங்கியில் டெபாசிட் செய்ய Washing machine -ல் கொன்டு சென்ற கட்டுக்கட்டான பணம்?
இந்திய மாநிலம், ஆந்திராவில் வாஷிங் மெஷினில் வைத்து கட்டுக்கட்டாக பணத்தை வைத்து கடத்த முயன்றதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
வாஷிங் மெஷினில் பணம்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள எலக்ட்ரானிக் விற்பனை செய்யும் கடையில் இருந்து 6 வாஷிங் மெஷின்கள் லோடு ஆட்டோவில் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு ஹவாலா பணம் கடத்தி செல்வதாக விசாகபட்டின பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், பொலிசார் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக சென்ற லோடு ஆட்டோவை வழிமறித்து விசாரித்தனர். அப்போது, 6 வாஷிங் மெஷின்கள் சீல் பிரிக்காமல் இருந்தனர்.
உடனே, சந்தேகித்த பொலிசார் வாஷிங் மெஷினை திறந்த போது கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதாவது, மொத்தம் இருந்த 6 வாஷிங் மெஷின்களில் ரூ.1.30 கோடி இருந்துள்ளது.
பொலிசார் விசாரணை
இதனைத்தொடர்ந்து, பணம் மற்றும் லோடு ஆட்டோவை பொலிசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளரிடம் கேட்ட போது, "தசரா பண்டிகையின் போது எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய அனுப்பி வைத்ததாக" கூறினார்.
இதில், பணத்திற்குரிய எந்தவொரு ஆவணங்களும் இல்லாதால் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |